
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, லிட்ச்ஃபீல்ட் ஆகியோர் சோற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - பெத் மூனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பெத் மூனி 33 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத் 5 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 33 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்கக்ப்பட்ட எல்லிஸ் பெர்ரியும் 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.