
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலிசா ஹீலி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்ச்ஃபீல்ட் - எல்லிஸ் பெர்ரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்ச்ஃபீல்ட் 34 ரன்களுக்கும், எல்லீஸ் பெர்ரி 41 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய பெத் மூனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பெத் மூனி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் ஜெஸ் ஜோனசன் 30 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்தது.