மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீராங்கனையாக தனுஜா கன்வர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. . இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Trending
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அந்தவகையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி தங்களது முதல் லீக் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இன்று தங்கள் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி தம்புளாவில் மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணிக்காக விளையாடிவரும் சுழற்பது வீச்சாளர் ஷ்ரேயங்கா பாட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது விரல் பகுதியில் காயமடைந்தார். மேலும் அவரது காயம் தீவிரமாகவுள்ளதை அடுத்து நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஷ்ரேயங்கா பாட்டில் விலாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கான மாற்று வீராங்கனையாக தனுஜா கன்வர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த தனுஜா கன்வர் ரிசர்வ் வீராங்கனைகள் பட்டியலில் இடம்பிடித்திருதார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆஷா சோபனா, சஞ்சனா சஜீவன் போன்ற வீராங்கனைகள் ஏற்கெனவே வாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில் தனுஜா கன்வருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, பூஜா வஸ்திரேகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், தனுஜா கன்வர், சஞ்சனா சஜீவன்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ரிஸர்வ் வீராங்கனைகள்: ஸ்வேதா ஸ்ரேவத், சைகா இஷாக், மேக்னா சிங்
Win Big, Make Your Cricket Tales Now