
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்படி நேபாள் அணி வீராங்கனைகள் கத்கா 4 ரன்களுக்கும், சிதா ரானா 26 ரன்களிலும், கபிதா குமார் 13 ரன்களிலும், கேப்டன் இந்து பர்மா ரன்கள் ஏதுமின்றியும், ருபினா சேத்ரி 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த பூஜா மஹாதோ - கபிதா ஜோஷி ஆகியோரு ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் புஜா மஹாதேவும் 25 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார்.
ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கபிதா ஜோஷி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், நேபாள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சதியா இக்பால் 2 விக்கெட்டுகளைகைப்பற்றினர். அதேமயம் நேபாள் அணியில் மூன்று வீரர்கள் ரன் அவுட் முறையில் மட்டுமே விக்கெட்டை இழந்தனர்.