இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் தொடர்; சென்னையில் டெஸ்ட் போட்டி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாடவுள்ளது.
அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஜூன் 16ஆம் தேதி தொடங்கி ஜூலை 09ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 16ஆம் தேதி தொடங்கி, ஜூன் 23ஆம் தேதி வரையும், டெஸ்ட் போட்டி ஜூன் 28 தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரையிலும் டி20 தொடர் ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஜூலை 09ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் பெங்களூருவிலும், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் சென்னையிலும் நடைபெறவுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி - ஜூன் 16: பிற்பகல் 1:30 மணி, பெங்களூரு
- இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜூன் 19: மதியம் 1:30 மணி, பெங்களூரு
- மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜூன் 23: மதியம் 1:30 மணி, பெங்களூரு
- டெஸ்ட் - ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை: காலை 9:30 மணி, சென்னை
- முதல் டி20 - ஜூலை 5: இரவு 7:00 மணி, சென்னை
- இர்னடாவது டி20 - ஜூலை 7: இரவு 7:00 மணி, சென்னை
- மூன்றாவது டி20 - ஜூலை 9: இரவு 7:00 மணி, சென்னை
Win Big, Make Your Cricket Tales Now