
Women's Day 2023: BCCI Announces Free Entry For All Fans For RCB Vs GG WPL 2023 Match! (Image Source: Google)
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் மொத்தம் 5 அணிகளுடன் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று மும்பை பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை மகளிர், சிறுவர்கள் மற்றும் ஆடவர்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் மகளிர், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.