Advertisement

ENGW vs INDW, Only Test: அரைசதமடித்து நம்பிக்கையளித்த ஷஃபாலி!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 18, 2021 • 22:15 PM
Women's One-Off Test: Shafali Verma's Brisk 50 Helps India
Women's One-Off Test: Shafali Verma's Brisk 50 Helps India (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்களை குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 231 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷாபாலி வர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தானர். இருவரும் அரை சதம் கடந்த அசத்தினர். இருப்பினும் அதற்கடுத்து இந்திய அணி அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. அதனால் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் பின்தங்கியது இந்தியா. 

Trending


இதனால் ஃபாலோ ஆன் ஆன இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்த இன்னிங்ஸின் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீராங்கனை ஷஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போன்று விளையாடி எதிரணி  பந்துவீச்சை மிரளவைத்து வருகிறார். 

இதன் மூலம் 18.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தமானதமானது. சிறுதி நேரத்திற்கு பிறகு மழை நின்று போட்டி மீண்டும் தொடங்கியது. 

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கருக்கு பிறகு அறிமுக ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்த முதல் நபர் எனும் சாதனையையும் படைத்தார். 

தொடர்ந்து மிரட்டலானா ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷஃபாலி, எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 24.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழைக்குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா 55 ரன்களுடனும், தீப்தி சர்மா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடரவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement