
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் ஆடுகின்றன.
இந்த சீசனுக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்துவருகிறது. மொத்தம் 409 வீராங்கனைகள் ஏலம் விடப்படுகின்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் முதல் வீராங்கனையாக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஏலம்விடப்பட்டார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியது.
மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது. இந்திய டாப் ஆர்டர் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ரூ.3.4 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்ட நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடி கொடுத்து யுபி வாரியர்ஸ் அணி எடுத்தது.