
Womens T20 Challenge 2022 : Supernovas finishes off 150/5 on their 20 overs (Image Source: Google)
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் - வெலாசிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிரங்கிய சூப்பர்நோவாஸ் அணியில் பிரியா புனியா, டேண்ட்ரா டோட்டின், ஹர்லீன் டியோல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரித்- தனியா பாட்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.