
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்குவார் என இந்திய அணி பயிற்சியாளர் அமோல் முசும்தார் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பயிற்சி ஆட்டங்களில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள முகாமிலும், மும்பைக்குப் புறப்படுவதற்கு முன்பும் நாங்கள் ஏற்கனவே ஹர்மன்ப்ரீத் கவுரை மூன்றாம் இடத்தில் தான் களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.