Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!

வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Women's T20 World Cup: South Africa Hammer Bangladesh To Seal Semi-final Spot
Women's T20 World Cup: South Africa Hammer Bangladesh To Seal Semi-final Spot (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 22, 2023 • 10:11 AM

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற  லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 22, 2023 • 10:11 AM

அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசேன் கேப், அயபோங்கா காகா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Trending

இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில் அதிக ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்பதால் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement