வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் கிடையாது - ராகுல் டிராவிட்!
இந்திய அணியில் இருக்கும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்றும், வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் அல்ல; பணிச்சுமை மேலாண்மை மிக முக்கியம் என்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நாளை ஜெய்ப்பூரில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தொடங்குகிறது.
முதல் டி20 போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் புதிய கேப்டன் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
Trending
அப்போது பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இந்திய அணிக்கு ஒரு டெம்ப்ளேட்டை செட் செய்யணும். நமக்கு அதற்கான போதிய கால அவகாசம் உள்ளது. இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறது. உலக கோப்பையை வெல்லவில்லை; அவ்வளவுதான். ஒரு அணியாக நாம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம்.
அணியில் உள்ள சில ஓட்டைகளை அடைக்க வேண்டும். மற்ற அணிகளின் டெம்ப்ளேட்டை பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. இந்திய அணிக்கு பொருத்தமான டெம்ப்ளேட்டை நாம் செட் செய்ய வேண்டும்.
அதேபோல் கிரிக்கெட்டில் பணிச்சுமை மேலாண்மை மிக முக்கியம். கால்பந்து விளையாட்டிலும் நாம் இதை பார்த்திருக்கிறோம். வீரர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை ஆகிய இரண்டுக்கும் தான் முக்கியத்துவம். பெரிய தொடர்களுக்கு வீரர்களை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
Also Read: T20 World Cup 2021
பணிச்சுமை மேலாண்மை மிக முக்கியம். வீரர்கள் ஒன்றும் மெஷின்கள் கிடையாது. சவால்களை எதிர்கொள்ளும் அவர்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அது மிக எளிது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now