எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது - தொடர் தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் சரியான ஒரு அணியை கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடரை இழந்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்மித், “இன்றைய ஆட்டத்தில் ஆடுகளத்தை நாங்கள் பார்க்கும் போது ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தலாம் என நினைத்தோம். ஆனால் கில் மற்றும் ஐயரை பாராட்ட வேண்டும். இருவரும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து தூக்கிக்கொண்டு சென்று விட்டார்கள்.
Trending
அதன் பிறகு கே எல் ராகுலும் சூர்யகுமார் யாதவும் விளையாடிய விதம் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக மாறியது. இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தினார்கள். நாங்கள் தொடர்ந்து சில போட்டிகளை தோல்வியை தழுவி வருகிறோம். முதலில் தென் ஆப்பிரிக்காவிலும் தற்போது இந்தியாவிலும் தோற்று விட்டோம்.
எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் மாற்ற முயற்சி செய்கிறோம். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் சரியான ஒரு அணியை கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன். இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் நாங்கள் மட்டுமல்ல இரண்டு அணிகளுமே உலக கோப்பை தொடருக்காக தான் தற்போது விளையாடி வருகிறோம். கடைசி ஒரு நாள் போட்டியிலாவது நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now