
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் இடம் பெறவில்லை. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலான ஆளு கவுண்டராக வந்த அக்சர் படேலை இந்தத் தொடரில் தேர்வு செய்யவே இல்லை. இதற்கு அடுத்து மேலும் நேற்றைய போட்டியில் கடைசி போட்டியில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை.
மிக முக்கியமாக டி20 கிரிக்கெட்டில் தற்போது தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரவி பிஸ்னாய் இல்லை. இத்தனை இல்லைகளை வைத்துக்கொண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த நாட்டிலேயே நேற்று இந்திய அணி களம் இறங்கியது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.