
ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் உஸ்மான் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களை எடுத்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 195 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் 9ஆவது இடத்தில் களமிறங்கிய மகாராஜ் 53 மட்டும்தான் அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஹர்மன் 47, ஜான்டோ 39, பவுமா 35 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.