WPL 2023: தஹ்லியா மெக்ராத் அதிரடி அரைசதமல்; டெல்லிக்கு 139 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமிர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி - யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளதால் அதற்கான முன்னோட்ட போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
Trending
அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அலிசா ஹீலி - ஸ்வேத ஷ்ரேவாத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஷ்ரேவாத் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிம்ரன் ஷேய்க் 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிசா ஹீலி 36 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த தஹ்லியா மெக்ராத் ஒருபக்கம் நிதானம் காட்ட, மறுமுனையில் கிரன் நவ்கிரே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹ்லியா மெக்ராத் அரைசதம் கடந்ததுடன் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now