Advertisement

WPL 2023: ஆட்ட நாயகி ஸ்கைவர்; தொடர் நாயகி மேத்யூஸ்; வீராங்கனைகளின் விருது பட்டியல்!

மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்றிய நிலையில், அந்த அணியின் வீராங்கனை யஷ்டிகா பாட்டீயாவிற்கு வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement
WPL 2023 award winners: Complete list of who won Orange Cap, Purple Cap and other awards!
WPL 2023 award winners: Complete list of who won Orange Cap, Purple Cap and other awards! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2023 • 11:26 AM

ஆடவர் ஐபிஎல் தொடரைப் போன்று பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று 5 அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்றன. கடந்த 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் நேற்று 26ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியுடன் முடிவடைந்தது. எட்டு எட்டு போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2023 • 11:26 AM

அதிக போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்றிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், யுபி வாரியர்ஸ் அணியும் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Trending

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் மெக் லேனின்ல் 35 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதுவே போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் இருவரும் அதிரடி காட்டினர். சிக்சரும், பவுண்டரியும் விளாசவே டெல்லி கேபிடல்ஸ் ஓரளவு 131 என்று ரன்களை எட்டியது.

இதையடுத்து 132 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் யஷ்டிகா பாட்டீயா,ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு வந்த ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் ஸ்கைவர் பிரண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். ஸ்கைவர்பிரண்ட் 55 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 60 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாட் ஸ்கைவர் ஆட்டநாயகியாகவும், ஹெய்லி மேத்யூஸ் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தொடரில் அதிக மதிப்புமிக்க வீராங்கனையாக வலம் வந்த ஹெய்லி மேத்யூஸ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்க்ளுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கினார். அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆரஞ்சு தொட்ப்பையை கைப்பற்றினார். 

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விருதுகளைப்பெற்றவர்கள்

  • இறுதிப்போட்டி ஆட்டநாயகி விருது - நாட் ஸ்கைவர்
  • தொடர் நாயகி விருது - ஹெய்லி மேத்யூஸ்
  • கேட்ச் ஆஃப்தி சீசன் விருது - ஹர்மன்ப்ரீத் கவுர்
  • வளர்ந்து வரும் வீராங்கனை விருது - யஷ்திகா பாட்டியா
  • அதிக ரன்கள்: மெக் லேனிங் (345 ரன்கள்)
  • அதிக விக்கெட்டுகள்: ஹெய்லி மேத்யூஸ் - (16 விக்கெட்டுகள்), சோபி எக்லெஸ்ய்டோன் (16 விக்கெட்டுகள்)
  • அதிக சிக்சர்கள்: ஷஃபாலி வர்மா (13 சிக்சர்கள்), ஷோஃபி டிவைன் (13 சிக்சர்கள்)
  • தனிநபர் அதிகபட்ச ரன்: ஷோஃபி டிவைன் (99 ரன்கள்)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement