
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத்தொடர்ந்து வந்த அலிஸ் கேப்ஸி, மரிசேன் கேப் ஆகியோரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மெக் லெனிங் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறுது நேரம் தாக்குப்பிடித்து ஓரளவுள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 25 ரன்களை எடுத்திருந்த ஜெமிமா ரோட்ரிஸ்க் விக்கட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லெனிங் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.