Advertisement

WPL 2023: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத்துக்கு 163 ரன்கள் டார்கெட்!

குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
WPL 2023: Harmanpreet Kaur's Blistering Fifty Takes MI To 162 Runs Against Gujarat Giants!
WPL 2023: Harmanpreet Kaur's Blistering Fifty Takes MI To 162 Runs Against Gujarat Giants! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 14, 2023 • 09:11 PM

மகளிர் பீரிமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 14, 2023 • 09:11 PM

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ஹீலி மேத்யூஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யஷ்திகா பாட்டியா - நாட் ஸ்கைவர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரை உயர்த்தினர். 

Trending

இதில் 36 ரன்களைச் சேர்த்திருந்த நாட் ஸ்கைவர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷ்திகா பாட்டியாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து வந்த கேப்டன் ஹர்மனப்ரீத் சிறப்பாக விளையாட, மறுமுனையில் வந்த அமிலியா கெர் 19, இஸி வாங்  ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியது. அதனைத்தொடர்ந்து மேற்கொண்டு ரன்களைச் சேர்க்காமல் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement