WPL 2023: அரைசதத்தைப் பதிவுசெய்து சாதனைப் படைத்த ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அரைசதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்.
ஆடவர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் இந்த ஆண்டு முதல் ஆரம்பமானது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந் தியன்ஸ் அணியில் யஸ்திகா பாட்டியா மற்றும் ஹைலீ மேத்யூஸ் ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். இந்த தொடரின் முதல் ரன்னை யஸ்திகா பாட்டியா தொடங்கினார். அவர் ஒரு ரன் அடித்து வரலாற்றில் இடம் பிடித்தார்.
Trending
இதையடுத்து, ஹீலி மேத்யூஸ் முதல் சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் முதல் சிக்சரை அடித்து வரலாற்றில் இடம் பிடித்தார். இதே போன்று, முதல் பவுண்டரியும் அவர் தான் அடித்தார். முதல் விக்கெட் எடுத்த வீராங்கனை பட்டியலில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தனுஜா கன்வர் இடம் பிடித்தார். ஆம், அவர் யஸ்திகா பாட்டியா விக்கெட்டை கைப்பற்றினார். குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் ஜார்ஜியா வாரேஹம் முதல் சீசனுக்கான முதல் கேட்ச்சைப் பிடித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 21 பந்துகளில் அரைசதம் கடந்து, மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இப்போட்டியில் 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 பவுண்டரிகளை விளாசியதுடன் 65 ரன்களை குவித்து அசத்தினார்.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைக் குவித்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now