
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ச் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து மும்பை இந்தியன்ஸை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ச் அணியின் தொடக்க பேட்டா் தேவிகா வைத்யா 6, கிரண் நவ்கிரே 17 ரன்களுடன் வெளியேறினா். பின்னர் ஜோடி சேர்ந்த அலிஸா-தஹ்லியா மெக்ராத் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. அலிஸா ஹீலி 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 58 ரன்களையும், டஹிலா 9 பவுண்டரியுடன் 50 ரன்களையும் விளாசி அரைசதம் பதிவு செய்தனா்.
அதனைத்தொடர்ந்து வந்த சோபி எக்லஸ்டோன் 1, தீப்தி சா்மா 7 அவுட்டான நிலையில், சிம்ரன் 9, ஸ்வேதா 2 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தனா். இதன்மூலம் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் யுபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைக் குவித்தது. மும்பை தரப்பில் சைகா இஷாக் 3 விக்கெட்டுகளையும், அமிலியா கொ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.