
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஷோபி டிவைன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - எல்லிஸ் பெர்ரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் மந்தனா 24 ரன்கலில் ஆட்டமிழக்க,எல்லிஸ் பெர்ரி 29 ரன்கலுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். பின்னர் வ்ந்த ஹீதர் நைட் 12, கனிக 12 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.