விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன் - சோபி டிவைன்
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன். அது எனக்கு பெரிதாக உதவியது என்று 36 பந்துகளில் 99 ரன்கள் விளாசிய சோபி டிவைன் பேட்டிளித்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்று தற்போது முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. பலம் பொருந்தி அணியாக காணப்பட்ட ஆர்சிபி பெண்கள் அணி முதல் 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவி பரிதாபமான நிலைக்கு சென்றது. பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற, மீதம் இருக்கும் மூன்று போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து விளையாடிய இரண்டு லீக் போட்டிகளையும் அபாரமாக வெற்றி பெற்றது ஆர்சிபி மகளிர் அணி. குறிப்பாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 188 ரன்கள் அடித்தது. இதை குறைந்த ஓவர்களுக்கும் சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆர்சிபி அணி தள்ளப்பட்டது.
Trending
தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தானா மற்றும் சோபி டிவைன் இருவரும் களமிறங்கினர். ஒரு முனையில் மந்தானா சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மறுமுனையில் வானவேடிக்கை காட்டிய சோபி டிவைன், 36 பந்துகளில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து, துரதிஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் எட்டு சிக்ஸர்கள் 9 பவுண்டர்கள் அடித்திருந்தார்.
இறுதியில், 189 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இன்னும் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது ஆர்சிபி பெண்கள் அணி. அதிரடியாக விளையாடிய சோபி டிவைன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது போசிய அவர், “முதல் ஐந்து போட்டிகளை தோல்வியில் முடித்தது மிகவும் வருத்தத்தை கொடுத்தது. அப்போது விராட் கோலி எங்களது கேம்ப்-க்கு வந்து பேசினார். நான் அவரிடம் தனியாகவும் பேசினேன். அதன் பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை இங்கே இருக்கும் மைதானங்களுக்கு ஏற்றவாறு மாற்றினேன். அவரின் அனுபவத்திற்கு நிறைய பகிர்ந்து கொண்டார். உத்வேகம் கிடைத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் இதே உத்வேகத்துடன் செயல்படுவோம். இன்னும் பிளேஆப் வாய்ப்பை உயிப்புடன் வைத்திருப்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now