WPL 2023: ஹீலி, மெக்ராத் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 160 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய யுபி வாரியர்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ச் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து மும்பை இந்தியன்ஸை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியில் தேவிகா வைத்யா 6 ரன்களிலும், கிரன் நவ்கிரே 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் அலிசா ஹீலி -தஹிலா மெக்ராத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Trending
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதங்களைப் பூர்த்தி செய்தனர். அதன்பின் 58 ரன்களில் அலிசா ஹீலி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 50 ரன்களைச் சேர்த்திருந்த தஹிலியா மெக்ராத்தும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சோபி எக்லெஸ்டோன், தீப்தி சர்மா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுதது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சைகா இஷாக் 3 விக்கெட்டுகளையும், அமிலியா கெர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now