
மகளீர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறத்து. நடப்பு சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன் ரன் ரேட்டில் மிகவும் பின் தங்கி புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு சீசனிலும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் நடப்பு சீசனில் அந்த அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலிரண்டு போட்டிகளிலேயே தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பும் வீரர்களுக்கு வாய்ப்புகளை அந்த அணி கொடுத்து வருவதே தோல்விக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.