
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது லீக் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் - குஜராத் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தோடக்க வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 7 ரன்களுக்கும், தயாளன் ஹேமலதா 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த கேப்டன் பெத் மூனி 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களிலும், ஸ்நே ராணா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து அமெலிய கெர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேத்ரின் பிரைஸுடன் தனுஜா கன்வெர் இணை ஜோடி சேர்ந்து விளையாடினார்.