
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான யுபி வாரியர்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ரூ.30 லட்சத்திற்கு ஜார்ஜியா வோல்வை யுபி வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.