சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை - ஸ்மிருதி மந்தனா!
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் நாங்கள் அவ்வப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வோல் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 99 ரன்களைக் குவித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து கிரண் நவ்கிரே 46 ரன்களையும், கிரேஸ் ஹேரிஸ் 39 ரன்களையும் குவித்தனர். ஆர்சிபி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Trending
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி போன்ற நட்சத்திர வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 69 ரன்களையும், ஸ்நே ரானா 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களில் ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன், கேப்டன் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஸ்மிருதி மந்தனா, “இப்ப்போட்டியின் முதல் பந்திலிருந்தே அவர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தனர். சீசனின் கடைசி ஆட்டத்தில் அவர்கள் வித்தியாசமான மனநிலையில் இப்போட்டியை விளையாடியுள்ளனர்
கடைசி மூன்று ஓவர்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் இப்போட்டியில் ஜார்ஜியா வோல் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். கடந்த சீசனில் எங்கள் அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களை இழந்தது மிகப்பெரிய தோல்வி. ஆனால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் நன்றாக இருந்தனர். பேட்டிங்கில் நாங்கள் தொடங்கிய விதத்தின் மூலம், வேகத்தை எடுக்க முடியும் என்று நினைத்தோம்.
Also Read: Funding To Save Test Cricket
நீங்கள் ஏதோ நினைக்கிறீர்கள், பிரான்சைஸ் கிரிக்கெட்டில் வித்தியாசமாக நடக்கும். இன்று ரிச்சா கோஷ் மற்றும் ஸ்நே ரானா பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்நே ரானாவுக்கு கடந்த சில வருடங்கள் கடினமாக இருந்தது, ஆனால் ஒரு மாற்று வீரராக அவர் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் அவ்வப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now