மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் குறித்த தெதி அறிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடவர் ஐபிஎல் தொடரைப் போன்று இந்த ஆண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் சீசனில் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 5 அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 அணிகள் உள்பட அதானி குரூப் (அகமதாபாத் அணி), கேப்ரி குளோபல் (லக்னோ அணி) ஆகிய நிறுவனங்களின் அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக ரூ.4669.99 கோடி வரையில் பிசிசிஐக்கு வருவாய் வந்ததாக செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் பிப்ரவரி 2ஆவது வாரத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பங்கேற்பதற்காக வெளிநாட்டு வீராங்கனைகளும் முன்பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் வரையில் இந்த ஏலத்திற்கு முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு அணிக்கு 18 பேர் என்று மொத்தமாக 90 வீராங்கனைகள் மட்டுமே எடுக்கப்பட இருக்கின்றனர்.
Trending
ஒவ்வொரு அணியும் வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக ரூ.12 கோடி தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்காக ஐபிஎல் கிரிக்கெட் மகளிர் பிரீமியர் லீக் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now