WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்!
டபிள்யூபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசன் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை பின்பற்றி மகளிருக்கு என்று பிரத்யேகமாக பிசிசிஐ கடந்த ஆண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் என்றழைக்கப்படும் டபிள்யூபிஎல் தொடரை பிசிசிஐ கடந்தாண்டு முதல் தொடங்கியது.
கடந்த ஆண்டு தொடங்கிய இத்தொடரின் முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இத்தொடரின் 2ஆவது சீசன் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரானது மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறௌம் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான முழு போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Trending
இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு டபிள்யூபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸை வழிநடத்திய பெத் மூனி, முதல் போட்டியில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதன் காரணமாக இந்திய வீராங்கனை ஸ்நே ரானா குஜராத் ஜெயண்ட்ஸை வழிநடத்தினார்.
இந்நிலையில் தான் நடப்பு சீசன் டபிள்யூபிஎல் தொடரில் மீண்டும் இணைந்துள்ள பெத் மூனி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும், ஸ்நே ரானா துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக்கேல் கிளிங்கர், அணியின் ஆலோசகராக முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் மற்றும் உதவி பயிற்சியாளர் நூஷின் அல் கதீரும் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now