Advertisement

WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகள் குறித்து இப்பதில் பார்ப்போம்.

Advertisement
WPL Player Auction: Smriti Mandhana Most Expensive Player; Ashleigh Gardner, Nat Sciver-Brunt Bigges
WPL Player Auction: Smriti Mandhana Most Expensive Player; Ashleigh Gardner, Nat Sciver-Brunt Bigges (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 14, 2023 • 10:41 AM

உலகின் மிக வெற்றிகரமான டி20 தொடரான ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதைப் போல மகளிரைக் கொண்டு புதிதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை நடத்த முடிவு செய்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக 12 கோடிகள் ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 அதிகபட்சமாக 18 வீராங்கனைகளை வாங்க வேண்டும்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 14, 2023 • 10:41 AM

முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

Trending

வரும் மார்ச் 4 முதல் 26 வரையில் முதல் சீசனின் போட்டிகள் நடைபெற உள்ளன. மகளிர் கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது என முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கான தொகைகள் குறித்த முழு விவரங்களும் கீழே உள்ளன.

மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (1.8 கோடி), நாட் ஸ்கைவர் (3.2 கோடி), அமெலியா கெர் (1 கோடி), பூஜா வஸ்த்ரகர் (1.9 கோடி), யஸ்திகா பாட்டியா (1.5 கோடி), ஹீதர் கிரஹாம் (30 லட்சம்), இசபெல்லா (30 லட்சம்), அமன்ஜோத் கவுர் (50 லட்சம்), தாரா குஜர் (10 லட்சம்), சைகா இஷாக் (10 லட்சம்), ஹேலி மேத்யூஸ் (40 லட்சம்), ட்ரியோன் (30 லட்சம்), ஹியூமிரா காசி (10 லட்சம்), பிரியங்கா பாலா (20 லட்சம்), சோனம் யாதவ் (10 லட்சம்), ஜிந்திமணி கலிதா (10 லட்சம்), நீலம் பிஷ்ட் (10 லட்சம்)

குஜராத் ஜெயண்டஸ்: ஆஷ்லே கார்ட்னர் (3.2 கோடி), பெத் மூனி (2 கோடி), சோபியா (60 லட்சம்), அனபெல் சதர்லேண்ட் (70 லட்சம்), ஹர்லீன் தியோல் (40 லட்சம்), டீன்ட்ரா டாட்டின் (60 லட்சம்), ஸ்னே ராணா (75 லட்சம்), சபினேனி மேகனா (30 லட்சம்), ஜார்ஜியா வேர்ஹாம் (75 லட்சம்), மான்சி ஜோஷி (30 லட்சம்), ஹேமலதா (30 லட்சம்), மோனிகா படேல் (30 லட்சம்), தனுஜா கன்வர் (50 லட்சம்), சுஷ்மா வர்மா (60 லட்சம்), ஹர்லி காலா (10 லட்சம்), பருணிகா சிசோடியா (10 லட்சம்), ஷப்னம் ஷகீல் (10 லட்சம்), அஷ்வனி குமாரி (35 லட்சம்)

டெல்லி கேப்பிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2.2 கோடி), மெக் லானிங் (1.1 கோடி), ஷஃபாலி வர்மா (2 கோடி), ராதா யாதவ் (40 லட்சம்), ஷிகா பாண்டே (60 லட்சம்), மரிசேன் கேப் (1.5 கோடி), டிட்டஸ் சது (25 லட்சம்), ஆலிஸ் கேப்ஸி (75 லட்சம்), தாரா நோரிஸ் (10 லட்சம்), லாரா ஹாரிஸ் (45 லட்சம்), ஜாசியா அக்தர் (20 லட்சம்), மின்னு மணி (30 லட்சம்), ஜெஸ் ஜோனாசென் (50 லட்சம்), தனியா பாட்டியா (30 லட்சம்), பூனம் யாதவ் (30 லட்சம்), சினேகா தீப்தி (30 லட்சம்), அருந்ததி ரெட்டி (30 லட்சம்), அபர்ணா மோண்டல் (10 லட்சம்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (3.4 கோடி), சோஃபி டெவின் (50 லட்சம்), எல்லிஸ் பெர்ரி (1.7 கோடி), ரேணுகா சிங் (1.5 கோடி), ரிச்சா கோஷ் (1.9 கோடி), எரின் பர்ன்ஸ் (30 லட்சம்), திஷா கசத் (10 லட்சம்), இந்திராணி ராய் (10 லட்சம்), ஸ்ரேயங்கா பாட்டீல் (10 லட்சம்), கனிகா அஹுஜா (35 லட்சம்), ஆஷா ஷோபனா (10 லட்சம்), ஹீதர் நைட் (40 லட்சம்), டேன் வான் (30 லட்சம்), ப்ரீத்தி போஸ் (30 லட்சம்), பூனம் கெம்னார் (10 லட்சம்), கோமல் சன்சாத் (25 லட்சம்), மேகன் ஷட் (40 லட்சம்), சஹானா பவார் (10 லட்சம்)

யுபி வாரியர்ஸ்: சோஃபி எக்லெஸ்டோன் (1.8 கோடி), தீப்தி சர்மா (2.6 கோடி), தஹ்லியா மெக்ராத் (1.4 கோடி), ஷப்னம் இஸ்மாயில் (1 கோடி), அலிசா ஹீலி (70 லட்சம்), அஞ்சலி சர்வானி (55 லட்சம்), ராஜேஸ்வரி கெய்க்வாட் (40 லட்சம்), பார்ஷவி சோப்ரா (10 லட்சம்), ஸ்வேதா செஹ்ராவத் (40 லட்சம்), யாஷஸ்ரீ (10 லட்சம்), கிரண் நவ்கிரே (30 லட்சம்), கிரேஸ் ஹாரிஸ் (75 லட்சம்), தேவிகா வைத்யா (1.4 கோடி), லாரன் பெல் (30 லட்சம்), லக்ஷ்மி யாதவ் (10 லட்சம்), சிம்ரன் ஷேக் (10 லட்சம்).

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement