Advertisement
Advertisement
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2024 • 08:53 PM

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்களைச் சேர்த்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2024 • 08:53 PM

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியானது ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களையும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனையடுத்து 7ஆவது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடினர்.

Trending

இதனால் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆகா சல்மான் 41 ரன்னுடனும், ஆமீர் ஜமால் 27 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். பின்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் சல்மான் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, என அடுத்தடுத்டு வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 74.24 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றது. மேற்கொண்டு இலங்கை அணியானது 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், இங்கிலாந்து அணி 45.59 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்திலும் நீடிக்கிறது. 

Also Read: Funding To Save Test Cricket

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க  அணியானது 38.89 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், இலங்கை அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்த நியூசிலாந்து அணியானது தற்போது 37.50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேச அணி 34.38 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.52 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக பாகிஸ்தான் அணியானது 16.67 புள்ளிகளை பெற்றும் பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement