
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணி தற்பொழுது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்திருக்க, நேற்று இரண்டாம் நாளில் இந்திய அணி 151 ரன்கள் முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே பரத் 3 ரன்னில் போலன்ட் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இன்னொரு பக்கத்தில் ஆடுகளத்தில் பவுன்சர் தாறுமாறாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒரு முனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரகானே அதை இன்றைய நாளிலும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அபாரமான ஒரு சிக்ஸரை அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்து விளையாடி வருகிறார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.