Advertisement
Advertisement
Advertisement

WTC 2023 Final: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய, ஆஸி வீரர்கள்! 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியா - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.   

Bharathi Kannan
By Bharathi Kannan June 07, 2023 • 15:14 PM
WTC 2023 Final: Both Teams are Wearing black armbands!
WTC 2023 Final: Both Teams are Wearing black armbands! (Image Source: CricketNmore)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்று கோப்பையை கோட்டைவிட்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.

Trending


அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் ஒடிஷாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த டெஸ்ட் போட்டி முழுவதும் இரு அணி வீரர்களும் மற்றும் போட்டி அதிகாரிகளும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.

இந்தியா: ரோஹித் சர்மா(கே), ஷுப்மான் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement