Advertisement

எனது பயிற்சியை நான் ஐபிஎல் தொடரின் போதே தொடங்கிவிட்டேன் - அக்ஸர் படேல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சியை ஐபிஎல் தொடரின் போதே தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.

Advertisement
WTC Final 2023: Axar Patel Confident Of India Shifting Into Top Gear For WTC Final
WTC Final 2023: Axar Patel Confident Of India Shifting Into Top Gear For WTC Final (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 01, 2023 • 12:14 PM

2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 01, 2023 • 12:14 PM

இந்தியாவில் எஸ்ஜி பந்துகளே பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென டியூக் பந்துகளில் வீச இந்திய வீரர்களுக்கு எளிதாக இருக்காது என்று ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய அக்ஸர் படேல் பேசுகையில், “ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும். அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம். இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement