Advertisement

WTC 2023: இந்திய - ஆஸியை இணைத்து பிளேயிங் லெவனை உருவாக்கிய ரவி சாஸ்திரி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார்.

Advertisement
WTC Final 2023: Ravi Shastri Reveals Combined India-Australia Test XI Ahead Of WTC Final
WTC Final 2023: Ravi Shastri Reveals Combined India-Australia Test XI Ahead Of WTC Final (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2023 • 01:10 PM

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2023 • 01:10 PM

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. மேலும் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வுசெய்துள்ளார். அவரது அணியின் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோரையும், ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாகா, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். 

Trending

இதுகுறித்து பேசிய அவர், “11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அஸ்வின் தலைசிறந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். அதேபோல் ஹசில்வுட், புஜாராவும் மிரட்டக் கூடியவர்கள். ஆகவே, அது எளிதானது அல்ல. என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர். முகமது ஷமி வின்டேஜே் போன்றவர். அவர் மேலும் மேலும் சிறந்த ஆட்டத்தை பெற்று வருகிறார். நாம் ஐபிஎல் போட்டியில் அதை பார்த்திருப்போம். இதனால் அவருக்கு அணியில் இடம்” என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

ரவி சாஸ்திரி தேர்வு செய்த பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, அலேக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், முகமது ஷமி. .

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement