
வரும் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.
இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கு இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியும், கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடுகின்றன.
இந்நிலையில், இந்திய அணி வீரர் விராட் கோலியின் அபார ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள். கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.