
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
பொதுவாக வேகத்துக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க மைதானங்களில் வெற்றி காண்பதற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தரமாக இருப்பது அவசியமாகும். அது போன்ற சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி இத்தொடரில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இதனால் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் 3ஆவது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் ஆகியோரில் களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது. இந்நிலையில் காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.