
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டெம்பா பவுமா - டேவிட் பெடிங்ஹாம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர்.