
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் இரண்டாம் நாஅள் ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவும 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தொடங்கியது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, முதல்நாள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.