Advertisement
Advertisement
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றுமே அழிவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பினருமே எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 06, 2023 • 12:00 PM
WTC Final: India Have A Good Bowling Attack, Going To Have To Play Well Against Them, Says Steve Smi
WTC Final: India Have A Good Bowling Attack, Going To Have To Play Well Against Them, Says Steve Smi (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் புகழை எட்டியுள்ளன. இதனால் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. டெஸ்ட் போட்டிகள் காணாமல் போய்விடுமோ என்று நான் சிறிது கவலைப்படுகிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றுமே அழிவில்லை. அது நேற்றும், இன்றும், என்றும் நிலைத்து நிற்கும். 

Trending


தற்போதைய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சிறப்பான இடத்திலேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் என்றுமே ஒரு பழமைவாதி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை என்றும் விரும்புபவன். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் நம்பிக்கையாக உள்ளன. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சலாலான விஷயமாக இருக்கும். 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பினருமே எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான். முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோன்று இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், அனைத்து நாடுகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். அஸ்வின், ஜடேஜா இருவருமே எதிரணியை மிரட்டுபவர்கள்தான்” என்று அவர் கூறியுள்ளார் . 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement