
WTC Final : India have announced their playing XI (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருக்கிறது. இப்போட்டி நாளை சவுத்தாம்ப்டனிலுள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிக்கான தண்டாயுதம் மற்றும் 11 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதால், இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.