உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்க இருந்தது.
தொடர் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 2ஆவது நாளான இன்று மழை பெய்யாததால், ஆட்டம் நடைபெற சாதகமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
Trending
அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now