
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும்? இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வார்களா? அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் செல்வார்களா? என்கிற கேள்விகள் எழுந்தது.
அதே நேரம் ஒரு ஸ்பின்னருடன் சென்றால் யாரை வெளியில் அமர்த்துவார்கள்? பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தும் ஜடேஜாவையா? அல்லது டெஸ்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் மற்றும் நம்பர் 2 ஆல்ரவுண்டராக இருந்து வரும் அஸ்வினை வெளியில் அமர்த்துவர்களா? என்கிற குழப்பங்கள் நிலவியது. இந்திய அணி இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் சென்றிருக்கிறது.
அந்த ஸ்பின்னருக்கான இடத்தில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் அஸ்வின் வெளியில் அமர்த்த முடிவெடுத்த ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரையும் விமர்சித்திருக்கிறார் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.