
WTC Final: Match Officials For ICC World Test Championship Final Announced (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. ஜூன் 12ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற தவறிய இந்திய அணி இந்த முறை அதை கைப்ப்ற்றும் முன்னைப்புடன் உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் உள்ளது.
அதேவேளையில் இறுதிபொபோட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.