
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியில் வருகிற 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டெஸ்ட் பவுலரான ஜோஷ் ஹசில்வுட், இறுதிப்போட்டியிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான போட்டி அட்டவணையால் காயம் ஏற்பட்ட நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கூட 3 போட்டிகளுக்கு பிறகு டிராப் செய்யப்பட்டார் ஹசில்வுட். பக்க வலியால் அவதிப்பட்டுவரும் அவர், ஆஸ்திரேலியாவின் கடைசி 19 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2021 தொடக்கத்தில் இருந்து முதல் தர ஆட்டங்களில் கூட பங்கேற்காமல் இருந்துவந்தார் ஹசில்வுட். இருப்பினும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான பெயர் பட்டியலில் அவருடைய பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐபிஎல் முடிந்த பிறகு கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முழு உடற்தகுதியுடன் பங்குபெறுவேன் என்று கூறியிருந்தார் ஹசொல்வுட்.