
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர், 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோஹித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49 ரன்களும், அஜிங்கியா ரஹானே 46 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியின் மூலமாக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறையும் இங்கிலாந்தில் தான் டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த முறையும் இங்கிலாந்தில் தான் டெஸ்ட் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டுமென்றால் அங்கே 20 நாட்களுக்கு முன்னதாக சென்றிட வேண்டும்.