
WTC Final: Ricky Ponting expects Scott Boland to be named in Australia's XI against India (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.
கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ஹேசில்வுட் களம் இறங்கவில்லை என்றால் அவருக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் களம் இறக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.