
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் கோப்பையை நியூசிலாந்து வென்றது. 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதன் இறுதிப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். எனவே அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடிக்கத்தான் போராடும்.
இரண்டாவது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தான் தொடர்ச்சியாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது ஆஸ்திரேலியா.
வெற்றி சதவிகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிகமான வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 77.78 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.