Advertisement
Advertisement
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!

இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 26, 2024 • 07:55 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 26, 2024 • 07:55 PM

அதேசமயம் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி அசத்தியது

Trending

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், 62.82 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.

அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 50 புள்ளிகளைப் பெற்று மீண்டும் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று நான்காம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியானது 47.62 புள்ளிகளைப் பெற்று தற்சமயம் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

இதற்கடுத்த இடத்தில் பாகிஸ்தானிடம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ள இங்கிலாந்து அணியானது 40.79 புள்ளிகளுடம் 6ஆம் இடத்தில் நீடிக்கிறது. அதேசமயம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று த்ற்போது 7ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம், முன்னதாக 7ஆம் இடத்தில் இருந்து வங்கதேச அணி தற்போது 30.56 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.52 புள்ளிகளுடன் இப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 72 புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியானது தற்போது அடுத்தடுத்த தோல்விகள் காரண்மாக இப்போது பின்னடைவை சந்தித்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement